வீரகாளியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு 4 லட்சம் பணம் வசூலாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் புகழ்பெற்ற வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் உண்டியல் மாவட்ட உதவிஆணையரான சுரேஷ் தலைமையில் திறக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உண்டியலில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது மேலும் 97 தங்கக் காசுகள் மற்றும் 94 வெள்ளிக் காசுகளும் இருந்துள்ளன.
இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஆய்வாளரான கண்ணன் மற்றும் செயல் அலுவலரான முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர்.