Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உண்டியல் பணத்தை திருடிய நபர்…. ஒரு வாரம் கழித்து கோவிலில் வீசி சென்ற சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு கிராமத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பத் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி பூஜை செய்வதற்காக சம்பத் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து சம்பத் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல கோவிலுக்கு சென்ற சம்பத் கோவில் வளாகத்தில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடப்பதை பார்த்து போலீசாருக்கும், ஊர் முக்கியஸ்தர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்த கோவில் கிடந்த ரூபாய்களை சேகரித்தனர். அதில் 17 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஒரு வாரம் கழித்து மர்ம நபர் காணிக்கை பணத்தை மீண்டும் கோவிலில் வீசி சென்றது தெரியவந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |