சென்னையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கேரளா மாநிலத்தின் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பாருங்கள் இந்தியாவிலே மின் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கேரளாவுடன் தமிழகத்தை ஒப்பிட்டு பார்த்து தமிழகத்தில் என்ன கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை சரி பார்த்து கூறியிருந்தால் அது சரியாக இருந்திருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை மின்சார உற்பத்திக்கும் விநியோகத்துக்குமான இடைவெளி அதிகமாக உள்ளது. அந்த இடைவெளி சரி செய்ய வேண்டி உள்ளது. அதனைத் தொடர்ந்து 2006 2011 காலகட்டத்தில் 2006 ஆம் ஆண்டில் ஏற்கனவே என்ன மின் தேவை இருந்தது, அதைவிட ஐந்து ஆண்டுகளில் 49% மின் தேவைகள் அதிகரிக்கிறது.
அதுவே கடந்த 5 ஆண்டுகளில் பார்த்தால் 27 முதல் 29% தான் அதிகரித்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகள், டேட்டா சென்டர் வரவு, ஆண்டுக்கு 10 லட்சம் கொடுக்கக்கூடிய புதிய மின் இணைப்புகள், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு லட்சம் மின் இணைப்புகள், இந்த ஆண்டு கொடுக்கப்பட்டுள்ள ரூ.50,000 மின் இணைப்புகள் இதையெல்லாம் கணக்கிட்டு பார்க்கும்போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு 50% மேலாக மின் தேவைகள் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான மின் உற்பத்தி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2016 தேர்தலில் எஸ்.பி.வேலுமணியும் விஜயபாஸ்கரன் தாக்கல் செய்த வேட்பு மனுவுக்கும், 2021 வேட்பு மனுவுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தால் ரெய்டு சரியா, இல்லையா என்பது புரியும். சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அந்த சொத்து விவசாயம் செய்தா வந்தது? “என் மீதுள்ள வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன், என் மீதான வழக்கை சரியாக விசாரிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது விசாரித்தது சரியில்லை என்று தானே அர்த்தம். அதைப் பற்றி சொன்னால் சில கசப்புகள் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.