Categories
தேசிய செய்திகள்

உண்மைக்கு முன்னால்… அகம்பாவம் தோற்றுப் போகும்… ராகுல் காந்தி டுவிட்…!!!

சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை எந்த அரசாங்கத்தாலும் வீழ்த்த முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை தாக்கினர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நோக்கிய விவசாயிகளின் பேரணி பற்றி ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கத்தாலும் வீழ்த்த முடியாது. உண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்றுப் போகும் என்பதை பிரதமர் மோடி நினைவில் கொள்ள வேண்டும். கருப்பு சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். இது ஆரம்பம்தான்”என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |