Categories
தேசிய செய்திகள்

உண்மையான இந்தியர்கள் யாரும்…. இதை பற்றி கவலைப்படமாட்டார்கள்…. சிடி ரவி…!!!

இந்தியாவில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையானது கடந்த சில நாட்களாக  கடுமையாக அதிகரித்துள்ளது .இதற்கு காரணம் உலக அளவில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு தான் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் பாஜக ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் உலகத்தரத்தில் இருப்பதாக வட மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் கலந்துரையாடி அதனை வீடியோவாக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிடி ரவி, “மக்களின் வரிப்பணம் ஆனது காங்கிரஸ் ஆட்சியின்போது கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் செலுத்தப்பட்ட வரியானது உலகத்தரம் வாய்ந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை கட்டுவதற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. மேலும்  எரிபொருள் விலை குறித்து உண்மையான இந்தியர்கள் எவரும் கலக்கமடைய மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |