Categories
உலக செய்திகள்

“உண்மையான ஜனநாயகம் தொடங்கியதா”….? பிரபல நாட்டுடன் இணைந்த ஹாங்காங்…. விழாவில் கலந்து கொண்ட அதிபர்….!!

சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியதாக  சீனா அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

சீனா நாட்டில் ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக விழா நடைபெறுகின்றது. இந்த விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஜி ஜின்பிங் கூறியதாவது  “சீனா நாட்டுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது.

ஹாங்காங் என்றும் என் மனதில்  நிரந்தரமாக இருக்கும். தங்கள் தாய் நாட்டுடன் ஹாங்காங் இணைந்த பிறகு ஹாங்காங் மக்கள் தலைவர்களாகிவிட்டார்கள். இங்கு  பல குழப்பங்களுக்கு பிறகு ஹாங்காங்  நாட்டை  கீழே விழ வைக்க முடியாது என பலர் வலியுடன் புரிந்து கொண்டுள்ளார்கள். நான் ஹாங்காங்கின் வளர்ச்சியில் குறிக்கோளாக உள்ளேன். ஹாங்காங் பல சவால்களையும் மீறி உயிர் பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் 5 வருடத்திற்கு பிறகு  சீனா அதிபர்  ஹாங்காங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயணம் காரணமாக ஹாங்காங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |