உண்மையான திராவிட இயக்கம் அதிமுக மட்டுமே என்றும், 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தந்தை பெரியார் அவர்கள், அண்ணா அவர்கள் கண்ட கனவை நிறைவேற்றியது என்றால் அண்ணா திமுக ஒன்று தான். உண்மையான திராவிட இயக்கம் என்றால் அண்ணா திராவிட இயக்கம் தான். அது திமுக அல்ல. 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. இங்கே பெண்களுக்கு உரிமை கிடைத்துள்ளது என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
Categories