செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜெய்பீம் படத்திற்கு வெளியான அறிக்கை மோசடியான அறிக்கை. ஏனென்றால் நீங்கள் பூலான்தேவி வழக்கில் என்ன நடந்தது ? கோர்ட்டு அவர்களுக்கு ராயல்டி கொடுக்கணும் தீர்ப்பு வந்ததா இல்லையா ? அப்போ நீங்கள்…. நான் என்ன சொல்கிறேன் முதலில் பாதிக்கப்பட்டவர் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால் நீங்கள் அந்த சமுதாயத்தையும், அந்த பார்வதி அம்மாள் என்கின்ற பெயரையும் எடுத்ததே உள்நோக்கம் கொண்டது.
ஏனென்றால் பூலான் தேவி படத்தில் வந்த சூழ்நிலை தனக்கு வந்து விட கூடாது என்று பண்ண பிராடு, ஏனென்றால் அதில் வந்து ராஜகண்ணு அதே பெயர் இருக்கிறது, சந்துரு அதே பெயர் இருக்கிறது, அப்ப இதை மட்டும் என் மாற்றினீர்கள்.அதனால்தான் நான் சொல்கிறேன் இது மோசடியான அறிக்கை.நீங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்றேன் என்று சொன்னால், அதுல உண்மை கதையும் அடிப்படையாக என்று சொல்லியிருக்கிறது, உண்மை பெரிய வில்லன் அதுல யாரு ?
உண்மையான வில்லன் அந்தோணிசாமி. அதை ஏன் மாற்ற வேண்டும் ? இது இந்துக்களுக்கு எதிராக செய்வதா ? நான் குறிப்பிட்ட சமூகமாக பார்க்கவில்லை இது ஏன் ? ஏனென்றால் நான் சமீபத்தில் ஒரு புத்தகம் பார்த்தேன் அதுல என்ன சொல்கிறார்கள் என்றால்…. திரவிடியன் பார்டிஸ்க்கும் மதம் மாற்றுகின்ற கிறிஸ்டியன் மிஷினேறிக்கும் 1922ல் இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுகின்ற போல் இருக்கிறார்கள். அதில் ஒரு பகுதியாக தான் இதை பார்க்கிறேன் என தெரிவித்தார்.