Categories
அரசியல்

உண்மையாவே ஊடகத்தின் மீது…. பாஜகவுக்கு மரியாதை உள்ளது…. சொல்கிறார் அண்ணாமலை…!!!

பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா சர்ச்சைகளின் நாயகனாக வலம் வருகிறார். எந்த ஒரு கருத்துக்கும் எதிர்வினையாற்றுபவர்களை தேசவிரோதிகள் என்று சொல்லும் அவர் ஊடகங்களை பலமுறை தரக்குறைவாக சாடியுள்ளார். அதன்படி பாலியல் தொழிலாளர்களை குறிக்குதும் கொச்சையான ஆங்கிலச் சொல்லை வைத்து பத்திரிக்கையாளர்களை இணைத்து வைத்து பேசுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ருத்ரதாண்டவம் படம் குறித்து பேசிய போது பத்திரிக்கையாளர்களை மீண்டும் அவர் தரக்குறைவாக பேசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சூழலில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலை, பத்திரிகையின் மீதும், ஊடகத்தின மீதும் தமிழக பாஜகவுக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. தமிழக பாஜக வளர்ச்சியில் பத்திரிகையின் பங்கு இன்றிமையாதது என்று குறிப்பிட்ட அவர், மக்களின் மன கண்ணாடியாக பத்திரிகை செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார். பத்திரிகை மற்றும் ஊடகத்தை ஹெச் ராஜா அவதூறாக பேசியதை தொடர்ந்து செய்து அண்ணாமலை இவ்வாறு டுவிட் செய்துள்ளார்.

Categories

Tech |