Categories
சினிமா தமிழ் சினிமா

அவரை உண்மையா காதலிச்சேன்…. ஆனால் தோல்வியடைந்து விட்டது…. அனுபமா ஓபன் டாக்…!!!

அனுபாமா ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் கேரளாவில் பிறந்தவர். 2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அனுபாமா தற்போது பதில் அளித்துள்ளார்.

அதன்படி, ரசிகர் ஒருவர் நீங்கள் காதலித்தது உண்டா? என்று கேட்டதற்கு ஆமாம். அது உண்மையான காதல், ஆனால் தோல்வி அடைந்து விட்டது என்று கூறியுள்ளார். மேலும் அந்த காதல் நீண்ட காலமாக நிலைக்கவில்லை என்பதால் அவரை பிரிய வேண்டியதாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய மன நிம்மதிக்காக அண்மையில்தான் ஓவியம் வரைய தொடங்கியதாகவும், அது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அமைதி என்பது நமக்குள் இருந்து வரவேண்டும் என்று நினைக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

Categories

Tech |