Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையா…! இது தான் அண்ணாமலையோட பிளான்…. போட்டுடைத்த ஈஸ்வரன்…!!!

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை போக்குவரத்து கழக அலுவலகத்தில் தீரன் தொழிற்சங்க பேரவையை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் திறந்துவைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெறும் ஐடி ரெய்டு எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, பழிவாங்கும் நடவடிக்கையோ இல்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் அதிமுகவை அழித்துவிட்டு எதிர்க் கட்சியாக பாஜக செயல்பட நினைக்கிறார். இது அண்ணாமலையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லாது என்று கூறினார். மேலும் தமிழக முதல்வர் குறித்து அண்ணாமலை அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் கொங்கு மண்டலத்தில் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |