Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உண்மையா உழைப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கல…. நான் சுயேட்சையாகவே போட்டியிடுவேன்…. அ.தி.மு.க உறுப்பினரால் கிளம்பிய சர்ச்சை….!!

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக உறுப்பினர் சுயேட்சையாக போட்டியிடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இன்னிலையில் தேர்தல் குழு தேர்தல் நடவடிக்கைகளையும்,விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியின் பொதுச் செயலாளர்களும் அந்தந்த கட்சி உறுப்பினர்களுக்கு, தேர்தலில் போட்டியிட தொகுதியை பங்கிட்டு கொடுத்தனர். அந்த வகையில் அ.தி.மு.க கட்சி உறுப்பினரான எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலர் கிரம்மர் சுரேஷ் கட்சியின் பொதுச் செயலாளரிடம் தனக்கு, மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு’ வேண்டியுள்ளார்.

இருப்பினும் இவருக்கு சீட்டு ஒதுக்கப்படவில்லை. இதனால் நேற்று கிரம்மர் சுரேஷ் சுயேட்சையாக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட ஊர்வலமாக ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் அதிகாரி கோட்டூர் சாமியிடம் வேட்புமனு கொடுத்துள்ளார். இதில் அவர் “கட்சியில் நேர்மையாக உழைப்பவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை” என கூறியுள்ளார். அதனால் தான் நான் அம்மாவின் உண்மையான தொண்டர்களின் மனசாட்சியாக தேர்தலில் தனியாக போட்டியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |