Categories
மாநில செய்திகள்

உண்மையில் பிரதமருக்கு அக்கறை இருந்தால்….. வெளிப்படையாக கூறவேண்டும் – தயாநிதிமாறன் விமர்சனம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் உண்மையில் பிரதமருக்கு அக்கறை இருந்தால் எல்லாவற்றையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று தயாநிதி மாறன் என்று விமர்சித்துள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் மாநிலங்களுக்கான விநியோகம், தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் மற்றும் திட்டமிடல், கடந்த ஆண்டில் மருத்துவ கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் சர்வதேச உதவிகளின் பயன்பாடு பற்றி பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |