Categories
தேசிய செய்திகள்

உண்மை காதல்: இனி நான் கல்யாணம் செய்யமாட்டேன்…. இறந்த காதலிக்கு தாலி கட்டி கதறிய காதலன்….!!!

இன்றைய இளைய தலைமுறை காதல் என்ற போர்வையில் காதலிப்பது போல் நடித்து கடைசியில் ஏமாற்றிவிட்டு செல்கின்றனர். அல்லது ஒரு தலை காதலால் பல்வேறு கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஒரு சிலரோ காதலித்து விட்டு பின்னர் தன்னுடைய கல்யாண வாழ்க்கை வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலனுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு சிலர் தன்னுடைய காதலனோ, காதலியோ இறந்துவிட்டால் தாமும் இறந்து போகும் நெகிழ்ச்சி சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய காதலியின் இறப்பை தாங்க முடியாத இளைஞர் ஒருவர் அவருடைய உடலுக்கு தாலி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாமை சேர்ந்த பிதுவன் தாமுலி என்ற அந்த இளைஞர் 24 வயதாகும் பிராத்தனா போராவை காதலித்து வந்தார். அண்மையில் உடல் நலக்குறைவால் இறந்த போரா இறந்தார். தன்னுடைய காதலியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாமுலி அழுது பின் போராவின் கழுத்தில் தாலி கட்டி தான் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சபதம் செய்துள்ளார். இந்த சம்பவம் பார்ப்பவர்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.

Categories

Tech |