அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜெர்மனி எச்சரித்துள்ளது.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி புதிய கடுமையாக விமர்சனம் செய்து வரும் அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் அருந்திய தேநீரில் விஷம் கலந்திருந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்றதாக அவரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சைபீரியாவில் இருந்து ஜெர்மனி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்து செல்லப்பட்டார். ஜெர்மனி தலைநகரான பெர்லினில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர் தொடர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
அவருக்கு நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய கொடிய விஷத்தை கொடுத்துள்ளனர் என்று ஜெர்மனி கூறியுள்ளது. இந்த நிலையில் அலெக்ஸி நவல்னிக்கு பீசம் கொடுத்தது தொடர்பாக ரஷ்யா விரைவில் விளக்கம் அளிக்கத் தவறினால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் விவாதம் செய்வார் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறியுள்ளார். மேலும் அவர், என்ன நடந்தது என்று தெளிவுபடுத்துவதற்கு ரஷ்யா எங்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், எங்கள் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து நாங்கள் விவாதிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.