நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து உதகை -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் உதகை -மேட்டுப்பாளையம் மறுமரர்கமாக மேட்டுப்பாளையம்-உதகை ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.