குழந்தைகள் வைத்து விளையாடும் ஆன்டி டாக்ஸிக் கிரையான்ஸ்கள் (crayons) வைத்து லிப் பாம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஹை குவாலிட்டி உள்ள கிரையான்ஸ் (சிவப்பு அல்லது பிங்க் நிறம்)
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேன் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிச் சூடு செய்யவும். பின்பு நன்கு தடிமனான கண்ணாடி டம்ளரைச் சூடான தண்ணீர் மீது நிற்க வைக்கவும். தற்போது டம்ளர் நன்கு சூடாகும் வரை காத்திருக்கவும். இந்த நேரத்தில் எடுத்து வைத்துள்ள கிரையான்ஸை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தற்போது எடுத்து வைத்துள்ள எண்ணெய்யைச் சூடான டம்ளரில் சேர்க்கவும்.
இச்சமயத்தில் அடுப்பின் தீயை நன்கு குறைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் வெட்டி வைத்துள்ள கிரையான்ஸ் துண்டுகளைச் சேர்த்து அவை நன்கு உருகும் வரை கலக்கவும். எண்ணெய் உடன் கிரையான்ஸ் நன்கு கலந்த பிற்பாடு, அரை டீஸ்பூன் தேனைச் சேர்த்துக் கொள்ளவும். தற்போது அடுப்பினை அணைத்துவிட்டு, டம்ளரை பாத்திரத்திலிருந்து எடுத்து விடவும்.
இப்போது டம்ளரில் உள்ள லிப் பாம் நன்கு கெட்டியாகி விடும். இதனைச் சிறிய டப்பாவில் எடுத்து வைத்து தினந்தோறும் லிப் பாம் ஆக பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம். இதனால் உதடு வெடிப்பு தவிர்க்கப்படும். மேலும் எளிதில் வறட்சி அடையாது.