Categories
சினிமா தமிழ் சினிமா

உதட்டழகிற்காக அறுவைசிகிச்சை செய்த பிரபல நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!!!!!!

தென்னிந்திய சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகின்றார். இந்த நிலையில் தமிழில் சமீபத்தில் அவரது நடிப்பில் உருவான சானிக்காயுதம் படம் வெளியானது. அமேசன் பிரைம்மில் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து மிகப் பெரும் பாராட்டை பெற்றிருக்கின்றார். இதே போல தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார்.

இந்த படம் ரிலீசான நான்காவது நாளிலே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை கொடுத்திருக்கின்றது. மேலும் இந்த படத்தில் மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷ் மாறி இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றார்கள். தற்போது வெளியாகி வரும் புகைப்படங்களில்  கீர்த்தி சுரேஷ் வித்தியாசமாக இருக்கின்றார்.

மேலும் கீர்த்தியின் தோற்றம் அவரது முந்தைய அவதாரத்தில் இருந்து சற்று வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் உதடு அறுவை சிகிச்சை செய்து இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றது.  நடிகைகள் அழகு சிகிச்சை செய்து கொள்வது இது ஒன்றும் முதன் முறையல்ல. இதற்கு முன்னதாக காஜல் அகர்வால் உதடு மற்றும் மூக்கு  சீரமைப்பு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். ஸ்ருதிகாசன், அதிதி ராவ், ஹைதாரி போன்றோரும் இதற்கு முன்னதாக அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |