பிரபல மலையாள நடிகர் அணிஷ் மேனன் மீது பெண் ஒருவர் பேஸ்புக்கில் மீ டூ பாலியல் புகார் தெரிவித்துள்ளார் .
பிரபல மலையாள நடிகர் அனீஸ் மேனன். இவர் தமிழில் தீக்குளிக்கும் பச்சைமரம், நம்ம கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஒரு அடார் லவ், டிரைவிங் லைசென்ஸ், லூசிபர், திரிஷ்யம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மேனன் மீது இளம்பெண் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் தெரிவித்துள்ளதாவது :|சிறுவயதிலிருந்தே எனக்கு நடிப்பு மீது ஆர்வம் உள்ளது. குறிப்பாக மோனோ ஆர்ட். பெரிய மனிதர்களின் பிள்ளைகளுக்கு அனீஸ் ஜி மேனன் மோனோ ஆர்ட் கற்று கொடுத்து வந்தார். அவருடன் சேர்ந்து என்னையும் தொழில் ரீதியாக படிக்க வைக்க வேண்டும் என தனது பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக அந்த ஆண்டு மோனோ ஆர்ட் கற்றுக்கொள்ள எனது தாயார் அவரிடம் நடிப்பு பயிற்சி வகுப்புக்கு சேர்த்துவிட்டார். அன்றிலிருந்து அவர் எனக்கு கற்றுத் தரத் தொடங்கினார். என்னிடம் நன்றாக பேசுவார். எப்போதும் என் கண்ணங்களை தடவுவார். பின்னர் அதிக சுதந்திரத்தை எடுத்துக் கொண்டார். உடலை தொடுவது பயிற்சியின் ஒரு பகுதி என்று எனது பெற்றோரை நம்ப வைத்தார். இதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதி என்று என் பெற்றோரை கூட அவரால் தவறாக வழிநடத்த முடிந்தது. ஒருகட்டத்தில் எனக்கு முத்தமிட்டு உதட்டை கடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். எனக்கு அழுகையும் பயமும் வந்தது. பெற்றோரிடம் நடிப்பு பயிற்சி வேண்டாம் என கூறினேன். என்னைபோல் பல பெண்கள் உள்ளனர். என்னை போல் ஒருவர் வெளிப்படையாக பேசினால் மற்றவர்களுக்கு தைரியம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு நான் தெரிவிக்கின்றேன்” என்று அவர் கூறினார்.