தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகாசி மாவட்டத்தில் உள்ள 26-வது வார்டில் திமுகவின் உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவையுடன், பெண்கள் சிலர் வாக்களிக்க வந்ததால் காவல்துறையினர் அவர்களை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். வாக்குச்சாவடி மையத்திற்குள் கட்சிக் கொடி மற்றும் சின்னம் போன்றவைகளை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி இருப்பதால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.