நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் நேரில் வந்து வாக்கு கேட்டால் மக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள் என்ற பயத்தால் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் மக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு கொடுப்பதாக கூறியிருந்த ஆயிரம் ரூபாய் எங்கே என கேள்வி எழுப்புகின்றனர். இந்த பயத்தால் உதயநிதி நயன்தாராவுடன் படம் நடிக்க ஓடி விட்டார்.”என அவர் கூறினார்.
Categories