Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி…. படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ….!!!!

தமிழ் திரையுலகில் பாடகராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வளர்ந்து வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கிய முதல் படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்து வெளிவந்த கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க,ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ZEE ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |