திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கல்லக்குடியில் போராட்டம் நடத்திய இடத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பெயரில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் திருச்சியில் கல்லக்குடியில் பெயர் டால்மியாபுரம் என மாற்றி அமைக்கப்பட்ட அதை கண்டித்து 1953 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் தண்டவாளத்தில் தலைவைத்து போராடியது அவருக்கு மிகப்பெரிய அரசியல் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. இன்று அதே கல்லக்குடியில் போராட்டம் நடந்த இடத்தை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, அப்போது எடுக்கப்பட்ட படத்தையும் பீட்டர் முகப்பு படமாக மாற்றி உள்ளார். இதை அவரது ஆதரவாளர்கள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.