Categories
அரசியல்

“உதயநிதியை குறிவைக்கும் அண்ணாமலை…!” இதுக்குப் பின்னால எதுவும் பிளான் இருக்குமோ..??

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் மத்திய அரசால் வழங்கப்பட்ட 172 கோடி டோஸ் தடுப்பூசிகள் எந்த பிரச்சனையுமின்றி மக்களுக்கு வீடு தேடி வந்தன. ஆனால் மாநில அரசால் வழங்கப்பட்ட ஒரு பொங்கல் பரிசு தொகுப்பு உருப்படியாக வந்து சேரவில்லை. பரிசு தொகுப்பில் பல்லி, கரப்பான்பூச்சி என பல உயிரினங்கள் இருந்தன. பலருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வெஜிடேரியானா அல்லது நான் வெஜிடேரியனா..? என்ற சந்தேகம் வந்துவிட்டது.

பெண்கள் அடமானம் வைத்த நகையை திருப்பி கொடுக்க திமுகவால் முடியவில்லை. கடந்த வாரம் கரூர் வந்த உதயநிதி ஸ்டாலினிடம் 1000 ரூபாய் எங்கே.? என குடும்பத் தலைவிகள் கேட்டதற்கு இன்னும் நான்கு வருடங்கள் உள்ளன என பதிலளித்துள்ளார் உதயநிதி. இதெல்லாம் ஒரு பதிலாகுமா..? அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டுவது திமுகவுக்கு கைவந்த கலை. மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை தன்னுடையது என அறிமுகம் செய்துள்ளது திமுக. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது போல ஒவ்வொரு அமாவாசை வரும் போதும் திமுக ஆட்சி முடிவுக்கு வருகின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.!” என அவர் கூறினார்.

Categories

Tech |