Categories
அரசியல்

உதயநிதி அப்படி ட்விட் போடுறாரு…! அரசு வெட்கப்பட வேண்டும்… முட்டாள் என நினைக்காதீங்க …!!

அமைச்சர் சேகர்பாபு முட்டாள் என்று நினைத்திருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சினிமா தியேட்டர் ஏ.சி ஹால். எந்த கோவில் ஏசி இருக்கு. கோவில்  திறந்தவெளி. ஒரு ஏசி ஹாலுக்குள்… சினிமா தியேட்டருக்கு  மக்களை  உட்கார அனுமதிக்கிறார்கள். கொரோனா பரவும் என்றால் மூடிய ஏசி ஹாலில் தான் வேகமாக பரவும்.

சேப்பாக்கத்தினுடைய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள்,  அவருடைய சமூக வலைதள அக்கவுண்டில் இந்த படத்தை ரிலீஸ் பண்றோம் போய் பாருங்க என்று போடுகிறார். அதை எல்லாம் பார்க்கும் போது அரசு வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் அதற்கு சொல்லாத காரணங்களை நம்முடைய ஆலயங்களுக்கு சொல்கின்றார்கள், கோவிலுக்கு செல்கிறார்கள், மசூதிக்கு சொல்கிறார்கள், தேவஸ்தானத்திற்கு சொல்கிறார்கள். அதனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

சேகர்பாபு அவர்கள் நம்மளை முட்டாள் என்று நினைத்திருக்கிறார். அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்றும், நமக்கு லாஜிக் தெரியாது என்று நினைத்திருக்கிறார். அப்போ மத்திய அரசுடைய சர்குலர் எங்க போச்சு ? சர்குலர் ஒரு அறிவுறுத்தல். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கொரோனா காலகட்டம் இருக்கிறது. ஒவ்வொரு அமைப்பு இருக்கு. அதை பொறுத்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்களே தவிர இவரின் சித்தாந்தங்களை கொரோனா என்கின்ற பெயர் மூலமாக மக்களுக்கு புகுத்தாதீர்கள் என்று தான் மத்திய அரசு சொல்கிறது என அண்ணாமலை விமர்சித்தார்.

Categories

Tech |