தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை திமுக கழக உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். இந்த அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு, சமூக ஊடகங்களை அதகளப்படுத்தி வருகின்றனர். இதனிடையே திமுக அரசின் அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும், புதிதாக சிலருக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும்,
தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று செய்திகள் சமீப நாட்களாக வெளியாகி வருகின்றது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை,
உதயநிதி அமைச்சராவது நமக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. யார் வேண்டுமானாலும் அமைச்சர் ஆகட்டும், இல்லை என்று சொல்வதற்கு நமக்கு என்ன ? இதை வந்து நாம் தப்ப சொல்லவில்லை. அது முதலமைச்சரின் முடிவு. முதலமைச்சர் அவர்கள் யாரை அமைச்சராக ஆக்குகின்ராறோ அவர்களுக்கு விட்டது, யார் வந்தாலும் எங்களுடைய வாழ்த்துக்கள் தமிழக மக்களுக்கு நல்லது செய்யட்டும் என வாழ்த்தினார்.