Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி அமைச்சரானால் சிறப்பாக செயல்படுவார்…. எ.வ.வேலு பெருமிதம்…!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றால் சிறப்பாக செயல்படுவார் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.  இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றி தேடி தந்தவர் உதயநிதி ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார். இதனிடையே, வரும் டிச.14ல் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதாகவும், அதற்காக பணிகள் முடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Categories

Tech |