திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளை கழக தலைவராக வருவதற்கு கட்டியம்போடுகிற நிகழ்வுகள்தான் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இன்று எம்எல்ஏவாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமில்லை, ஒட்டுமொத்த திமுக மற்றும் பொதுமக்களின் ஆசையாக உள்ளது என்று கூறிய அவர், திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு இளைஞரணிதான் என்றார்.