செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நகை கடனை கூட்டுறவு வங்கியில் போய் வைங்க வைங்க என்று கூவுனது நாங்களா ? உதயநிதி ஸ்டாலின் சொன்னாரு, முதலமைச்சர் சொன்னாரு, அங்கே கனிமொழி அக்கா சொன்னாங்க, இன்றைக்கு அமைச்சராக இருக்கிறவர்கள் எல்லாம் கூட்டுறவு வங்கியில் நகையை வைங்க என்று சொன்னார்களே ஒழிய, நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் யார் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுங்க.
நாங்களே சட்டத்தை வகுத்துள்ளோமே, இவங்க ஒன்றும் புதுசா சட்டம் வகுக்க வேண்டியதில்லை. முறைகேடாக எந்த நிர்வாகக் குழு தவறு செய்தாலும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம். அதை சட்டத்தை உருவாக்குனோம். நான் கூட்டுறவு துறை அமைச்சராக இருந்ததினால் நாங்களே அந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
இதே சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம். அவங்க எதிர்ப்பு தெரிவித்தார்கள், நீங்கள் பழிவாங்குவதற்காக கொண்டு வாறிங்க என்றார்கள். நாங்கள் பழி வாங்குறதுக்கு கொண்டு வர வில்லை. கூட்டுறவு சங்கத்தை புனரமைப்பதற்காக, தவறுகளை களைவதற்காக கொண்டு வந்துள்ளோம், அப்படி சொன்ன பிறகு தான் ஒத்துக்கொண்டார்கள். தவறுகள் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்று தான் நாங்கள் சொல்கின்றோம் என தெரிவித்தார்.