சென்னை, சேப்பாக்கம் எம்எல்ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக அமைச்சராக பொறுப்பேற்கிறார். காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எதிர்கட்சித் தலைவர் EPS உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பதன் மூலம் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயரும்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது எதிர்பார்த்த ஒன்றுதான் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அமைச்சர் பதவியை ஏற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என சீமான் தெரிவித்துள்ளார்.