பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தை இயக்க இருக்கின்றார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கின்றார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் உதயநிதியின் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
இந்த சூழலில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் production பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தற்போது இந்த படத்திற்கான பின்னணி இசை பணிகளை ஏ ஆர் ரஹ்மான் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவரது ஸ்டூடியோவில் ஏ ஆர் ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ் என்னுடைய நீண்ட நாள் காத்திருப்பு கிட்டத்தட்ட தற்போது வெளிச்சத்திற்கு வருகின்றது மாமன்னன் மூலமாக தான் இது நடைபெற்று இருக்கிறது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த கூட்டணி சாத்தியமானதற்கு உதயநிதி மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு எனது நன்றிகளை கூறிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.