அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “அதிமுகவில் அனைவரது வேட்பு மனுவிலும் உண்மையான தகவல்கள் உறுதி செய்யப்பட்டிருந்தது. அதற்கு நான் என்னுடைய மிகுந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் திமுகவை பொறுத்தவரை பெரும்பாலான மனுக்களில் பொய்யான தகவல்ளே இடம்பெற்றிருந்தன. இதுபோல் திமுக சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் மீது குற்ற வழக்குகள் இருந்தது. இதை எங்கள் கட்சியைச் சேர்ந்த தீனதயாளன் கண்டுபிடித்தார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக அவருடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவருக்கு உடந்தையாக சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இந்த அதிகாரிகள் தங்கள் தவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் இல்லை எனில் அவர்கள் நீதிமன்றத்தை சந்திக்கக்கூடும் எச்சரித்தார். 535 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து கொஞ்சம் கூட நிறைவேற்றப்படவில்லை. குடும்பத்தலைவி ஆயிரம் ரூபாய் என்றார்கள், கேஸ் சிலிண்டர் மானிய விலையில் கிடைக்கும் என்றார்கள், பெட்ரோல் டீசல் விலை குறையும் என்றார்கள், ஆனால் எதுவும் செயல்படவில்லை. அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சியை பார்த்து சூடு சொரணை இருக்கிறதா…? என்று கேட்டாரே உதயநிதி ஸ்டாலின் இப்போது அவர் எங்கே.?” இவ்வாறு அவர் பேசினார்.