Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய வடிவேலு… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் வடிவேலு சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் இவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் நடிகர் வடிவேலு கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படங்களில் நடிக்க வடிவேலு தயாராகி வருகிறார். அதன்படி இவர் லைகா நிறுவனம் தயாரிப்பில்  சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

Vadivelu meets Udhayanidhi Stalin! What's brewing?

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நடிகர் வடிவேலு நட்பு ரீதியாக சந்தித்து பேசியுள்ளார். மேலும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |