உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை சரியாக 9:30 மணியளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அவர் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கும், எதிர் கட்சி துணைத் தலைவர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் அவர்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் இந்த விழாவில் பங்கேற்பதற்காக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய விசிகவின் திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோருக்கும் இந்த அழைப்பு என்பது விடுக்கப்பட இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இந்த அழைப்பாணை என்பது வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் பங்கேற்பார் என்று தகவலும் வெளியாகி உள்ளது..