உதயநிதி ஸ்டாலின் அரசியலின் கத்துக்குட்டி என அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அரசியலின் கத்துக்குட்டி என அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மேலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுவதாகவும், 23ஆம் புலிகேசி போன்று செயல்படுவதாகவும் திமுகவின் வரலாற்றைக் கூறினாள் சந்தி சிரித்து விடும் என கடுமையாக சாடியுள்ளார்.