அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நேரே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபலமாக வலம் வரும் அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார்.
All the best @BoneyKapoor @Udhaystalin @ZeeStudios_ pic.twitter.com/aKGE6gA4kb
— Dhiraj Kumar (@AuthorDhiraj) April 16, 2022
உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல் நிச்சயம் ஒலிக்கும் என பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வருகின்ற மே 20ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி ஆகிய பலர் நடித்திருக்கிறார்கள் குறிப்பிடத்தக்கது.