“நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருக்கிறார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நெஞ்சுக்கு நீதி” படத்தை நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் திரை அரங்கில் பார்த்தார்.
இதையடுத்து “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனிகபூர், ராகுல் என்று அனைத்து படக் குழுவினருக்கும் தன் வாழ்த்துகளை ஸ்டாலின் தெரிவித்தார். வரும் மே மாதம் 20ஆம் தேதி அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழகம் எங்கும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.