Categories
தேசிய செய்திகள்

உதய்பூர்: டெய்லர் கொலைக்கு இவர்தான் காரணம்…. உச்சநீதிமன்றம் காட்டம்….!!!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக நூபுர்சர்மா இருந்தார். கடந்த மே 27 ஆம் தேதி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்தார். இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்டார்.

தற்போது டெய்லர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நுபுர் சர்மாவே காரணம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள் “நுபுர் சர்மாவிற்கு எதிராக பல எஃப்ஐஆர்கள் இருந்த போதிலும் அவரை ஏன் டெல்லி காவல்துறை கைது செய்யவில்லை? அவர் மன்னிப்பு கேட்டது எல்லாம் மிகவும் காலதாமதமானது. நுபுர் சர்மா நடந்துகொண்ட விதம், பின் அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |