கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் உதவிக்கு அழைக்கப்பட்ட போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல்தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் கேட் என்ற இளம்பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கேட் தனது கணவரை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரி Brian Burkett அந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி அவரின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணையும் வாங்கியுள்ளார். இதனையடுத்து பெண்ணுக்கு குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயலில் ஈடுபட்ட Brian Burkett கொஞ்சம் கொஞ்சமாக ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கணவரிடமும் பிரச்சினை இருப்பதால் என்ன செய்வது என்று தெரியாத கேட் பெண்களுக்கு உதவும் ஒரு அமைப்பிடம் காவல்துறை அதிகாரி குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் தன்னை பற்றி புகார் அளித்ததில் ஆத்திரமடைந்த போலீசார் உடல்நடம் சரியில்லாத கேட் அறுவைசிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருக்கும் கேட் வீட்டிற்கு 10 போலீசார்களுடன் சென்று அவரை கடத்தி ஒரு மருத்துவமனையில் யாருக்கு தெரியாமல் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து கேட் கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்த பிரச்சனை காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட் மட்டுமின்றி சாரா என்ற பெண் உட்பட 4 பெண்கள் காவல்துறை அதிகாரி Brian Burkett மீது புகார் அளித்துள்ளனர். மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.