தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. அது மட்டுமின்றி கிராமப்புற மாணவர்கள் தங்களுடைய படிப்பினை பாதியிலே விட்டுவிடாமல் தொடர்ந்து கல்வி பயில உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பெற மாணவர்களின் ஆண்டு வருமானம் முக்கியம்.
இந்நிலையில் தமிழகத்தில் கல்வி உதவித்தொகை பெறும் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டு வருமான வரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 3 முதல் ஆறாம் வகுப்பு படிக்கும் கிராமப்புற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அவர்களுடைய பெற்றோர்களின் ஆண்டு வருமானம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.