தி.மு.க.வி.னரை கண்டித்து அ.தி.மு.க-வினரின் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு நான்கு முனை சாலையில் அ.தி.மு.க-வினரின் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர்கள் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிப்பதாகவும், இதனை கண்டிக்காத தேர்தல் அலுவலர்கள் கண்டித்தும் இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது.
இதில் அ.தி.மு.க. செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரபத்திரன், ராகவன், ஸ்ரீதர், உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தேர்தல் அலுவலர் ரவிச்சந்திர பாபு, தாசில்தார் கோவிந்தராஜ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தி.மு.க.வி.னர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.