Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உதவித்தொகை வேண்டுமா….? விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

மீனவர் நலத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் படி மீனவர் குடும்பத்தை சேர்ந்த பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கமானது 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் டி.இ.எம்.கே.ஏ அறக்கட்டளை உபரி நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு பள்ளிக்கூடம், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம், மாநகராட்சி பள்ளி கூடம் ஆகிய ஏதேனும் ஒன்றில் 12-ஆம் வகுப்பில் 60 விழுக்காடு மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதனை அடுத்து முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் அனைத்து பாடங்களிலும் 50 விழுக்காடு மதிப்பெண்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதேபோல் டி.இ.என்.வி அம்மாள் கல்வி உதவித்தொகை உபரி நிதியிலிருந்து பழங்குடி மக்களில் பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு சவரன் தங்கமானது 2019-20 ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை பெற ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0424-2221912 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |