Categories
சினிமா தமிழ் சினிமா

உதவி இயக்குனரை…. இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை…. திரை பிரபலங்கள் வாழ்த்து….!!!

அஞ்சலி நாயர் உதவி இயக்குனரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

அஞ்சலி நாயர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடலாவார்.  இவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தமிழில் நெல்லு,  உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஞ்சலி நாயர் ஏற்கனவே அனிஷ் உபாசனா  என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஆவ்னி  என்ற பெண் குழந்தையும் உள்ளது.

பின்னர் இவர்கள் இருவரும்  கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் அஜித் ராஜு என்பவருடன் நெருக்கமாக பழகுவதாக சில தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் அஜித் ராஜு,  அஞ்சலி நாயரை   இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோ வை தனது முகநூல் பக்கத்தில் அஜித் ராஜு  வெளியிட்டுள்ளார். இவருக்கு  நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |