டெல்லியில் உள்ள பாண்டவ் நகரின் யமுனா காதர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தனது தாய்-தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் சிறுமியின் தந்தை பணி நிமித்தமாக உத்தர பிரதேசத்திற்கு சென்றிருந்த வேளையில் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அண்டை வீட்டில் இருப்பவர்களை உதவிக்கு அழைக்குமாறு சிறுமியின் தாயார் கூறியுள்ளார். அதன்படி பக்கத்து வீட்டில் இருந்த அருண் என்பவரிடம் சென்று தனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி உதவுமாறு சிறுமி கேட்டுள்ளார்.
இதையடுத்து அருண் மருந்து வாங்கலாம் என்று சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதுமட்டுமல்லால் இச்சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறினால் கொன்றுவிடுவேன் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார். ஆனால் சிறுமி துணிச்சலுடன் காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளி அருணை வலைவீசி தேடி வருகின்றனர்.