மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், அமைச்சர் பெரியகருப்பன், கோட்டாட்சியர் முத்துக்கழுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் 155 பயனாளிகளுக்கு ரூபாய் 67 லட்சத்து 3 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவி, 130 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் 7 நபர்களுக்கு 82 ஆயிரம் ரூபாய் உதவிதொகை, விதவை உதவித்தொகை, 13 நபர்களுக்கு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் உதவிதொகை உள்ளிட்ட பல உதவித்தொகை மற்றும் உபகாரண பொருட்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார்.