ஸ்ருதிஹாசன் படத்தில் பெண்களின் ஆக்சன் சீன் குறித்து பெருமையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் இசை அமைப்பாளராக வேண்டும் என்று சினிமாவிற்கு வந்தார். ஆனால் இவர் நடிகையாகிவிட்டார். சென்ற வருடம் தெலுங்கில் “டிராக்” திரைப்படத்தில் ரவிதேஜாவுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் சண்டைக்காட்சியில் அசத்தியிருந்தார் ஸ்ருதி. இந்நிலையில் இவர் தற்போது பிரசாத் நீல் இயக்கத்தில் “சலார்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்கின்றார்.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ஆக்சன் சீன் இருக்கின்றதாம். இதனால் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்று வருகின்றார் ஸ்ருதி. அப்போது ஸ்ருதிஹாசன் கூறியுள்ளதாவது, “படங்களில் பெண்களுக்கான ஆக்சன் சீன்கள் குறைவாகத்தான் இருக்கின்றது. இதற்காக இயக்குனர்களை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் ரியல் லைஃபில் அப்படித்தான் இருக்கின்றது. ஆனால் மற்றவர்களை விட “உதைப்பதில் சிறந்தவர்கள் பெண்கள்தான்”. பெண்கள் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும்” என கூறியுள்ளார்.