Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?…. கடும் போட்டிக்கு மத்தியில் வெளியான கருத்துக்கணிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வரும் 10-ஆம் தேதி இந்த வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் ? என்ற கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது.

அந்தக் கருத்துக் கணிப்பில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். “டைம்ஸ் நவ்” கருத்துக்கணிப்புகள், குறைந்தபட்சம் ஆட்சியமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் 37 இடங்களில் பாஜகவும், 31 இடங்களில் காங்கிரசும் வெற்றிபெறும் எனவும், ஆம் ஆத்மி மற்றும் இதர கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.

C-Voter :-

காங்கிரஸ் -35, பாஜக -29 மற்றும் இதர கட்சிகள்-6 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

Poll of Polls :-

காங்கிரஸ் -33, பாஜக -34 மற்றும் இதர கட்சிகள் -3 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சரிபாதி இடங்களை கைப்பற்றும் என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்க இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரியவந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 57 எம்எல்ஏக்களுடன் உத்தரகாண்டில் தற்போது ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |