உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 5 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பெகாஸ்வரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பணியிடங்களில் 65 சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர்.
பின்னர் அங்கு சென்ற மீட்புக்குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவாலி சிகரத்தில் 4 நாட்களாக சிக்கி தவித்த 22 பயணிகளை நேற்று மீட்டனர். மீதமுள்ள 10 பேரை மீட்கும் பணி இன்று நடைபெற்று வருகின்றது. மேலும் பள்ளத்தாக்கில் சிக்கித்தவித்த அறுபதுக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.