உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கன மழை வெள்ளத்தை தொடர்ந்து தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இதில் 24 பேர் காயமடைந்துள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளதாக மீட்புக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.