Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு… 19 பேர் உயிரிழப்பு… 30 குழுக்கல் கொண்ட மீட்பு பணி… பெரும் சோகம்…!!!!!

உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து திரும்பிய போது 17,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பணி சிறையில் சிக்கிக் கொண்டுள்ளனர். இதில்  தேசிய சாதனை படைத்த வீராங்கனை உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழலில் நேற்று நடைபெற்ற மீட்பு பணியின் போது மேலும் 19 உடல்கள் மீட்கப்பட்டிருக்கிறது.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது மேலும் இன்னும் பத்துக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீட்பு பணிகள் பற்றி இன்று உத்தரகாண்ட் போலீஸ் டிஜிபி அசோக்குமார் பேசும்போது பனிசரிவு நடைபெற்ற பகுதிகளில் இருந்து மொத்தம் 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் மூலமாக உடல்களை மாற்றி ஹெலிபேட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இன்று மேற்கொள்ளப்படுகிறது மொத்தம் 30 மீட்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேரு மலை ஏறுதல் நிறுவனத்தினர் இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படையினர் தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இந்திய விமானப்படையினர் என பல குழுக்கள் பணி சிறையில் சிக்கியவர்களை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். மேலும் உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவ புல் மார்க்கில் இருந்து நிபுணர் குழு ஒன்று விரைந்துள்ளது உத்திரகாசியில் உள்ள மாட்டி ஹெலிபேட்டில் மீட்பு பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |